பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வர போகிறதா?? உண்மையை போட்டு உடைத்த வெண்பா!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடிக்கும் வெண்பா சமீபத்தில் இன்ஸ்டாவில் லைவில் மக்களுக்கு காட்சியளித்தார். மேலும் பல சந்தேகங்களையும் தீர்த்து வைத்தார். பாரதி கண்ணம்மா சீரியல் எப்பொழுது முடியும் என்று ரசிகர் கேட்ட கேள்விக்கும் அதிரடியாக பதிலளித்துள்ளார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது ஹேமா, லட்சுமி பிறந்த நாள் விழாவை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் வெண்பா ஏதேதோ சொல்லி கண்ணம்மாவை வீட்டிற்கு வரவழைக்க அது வெண்பாவின் திட்டம் தான் என்று தெரிந்து வேலைக்காரியை நொறுக்கி விட்டார்.

மேலும் ஹேமா வேறு கண்ணம்மாவை பார்த்து விட பாரதியை அழைத்து இதுதான் சமையல் அம்மா என்று சொல்கிறார். கண்ணம்மாவிற்கு வேறு வழியும் தெரியவில்லை. பாரதி முன் வந்து நிற்கிறார். இதனால் என்னென்ன பிரச்சனைகள் வர போகிறது என்றும் தெரியவில்லை. இப்படி பல திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் இந்த சீரியல் கிளைமாக்ஸ் எப்பொழுது வரும் என்று பலரும் காத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் வெண்பா இன்ஸ்டாவில் லைவில் பேசியபோது ரசிகர் ஒருவர் இந்த சீரியல் எப்பொழுது முடியும் என்று கேட்க அதற்கு வெண்பா அதிரடியாக பதிலளித்திருந்தார். ஏங்க உங்களுக்கு இந்த ஆசை, கொஞ்ச நாளைக்கு நாங்க சம்பாதிச்சுக்குறோமே, இப்போதைக்கு இந்த சீரியல் முடியாது என்று கூறியுள்ளார் வெண்பா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here