ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலையில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை

0

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என முதல்வர் எழுதிய கடிதத்திற்கு 7 பேரையும் விடுதலை செய்வதில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை என்று காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

7 பேர் விடுதலையில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக தமிழர்கள் 7 பேர் சிறையில் உள்ளனர். அவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்று எழுதி உள்ளார். சிரியாவில் 30 ஆண்டுகளாக அடைபட்டு இருக்கும் 7 பேரை மீட்க தமிழக அரசு மேற்கொள்ளும் முயற்சியை மக்கள் பாராட்டி வந்த நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

7 பேர் விடுதலை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம் தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை என்றும் தமிழர்கள் என்ற அடிப்படையில் 7 பேரையும் விடுதலை செய்வதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை  என்று செய்தியாளர்களிடையே பேசிய அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here