40 ஆயிரம் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று – மாநில அரசு திடுக்கிடும் தகவல்!!

0
DELHI, INDIA - 2020/05/02: A girl reacts as a doctor takes a swab from her nose to test for the coronavirus disease at a mobile testing center, during an extended nationwide lockdown to slow the spread of the coronavirus disease (COVID-19). (Photo by Amarjeet Kumar Singh/SOPA Images/LightRocket via Getty Images)

தற்போது நாடு முழுவதும் வீசும் கொரோனாவின் இரண்டாவது அலையின் காரணமாக தற்போது மாநிலத்தில் 40 ஆயிரம் குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று:

இந்தியாவில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையின் வீரியம் மிக அதிகமாக காணப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வீசிய முதல் அலையில் முதியவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வீசும் இரண்டாவது அலையில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மிக அதிகமான அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் கடந்த 2 மாதத்தில் அதிக குழந்தைகள் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். அதன்படி கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி முதல் மே மாதம் 18ம் தேதி வரை உள்ள நிலவரப்படி 9 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் பாதிப்பு விகிதம், 143% ஆக அதிகரித்துள்ளது. அதாவது சுமார் 40 ஆயிரம் பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அதேபோல் 10 முதல் 19 வயது சிறுவர்கள் சுமார் 1,05,160 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

கடும் வீழ்ச்சி அடைந்த தங்கத்தின் விலை – கொண்டாட்டத்தில் நகை பிரியர்கள்!!

தற்போது இந்த தகவலினால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் குழந்தைகள் மற்றும் சிறிவர்களிடையே பாதிப்பு அதிக அளவில் இருந்தாலும் உயிரிழப்பு விகிதம் குறைந்த அளவில் உள்ளது என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில் குழந்தைகளுக்கு தொற்று ஏற்படுவதற்கு பெற்றோர்களே காரணம் என்று அதிரடியாக தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here