`ஒருவர் மூலம் 406 பேருக்குக் கொரோனா பரவும்’ – சுகாதாரத்துறை எச்சரிக்கை!!!

0

கொரோனா தொற்று பாதித்த ஒருவரிடம் இருந்து சுமார் 406  பேருக்குக் கொரோனா பரவும் என்று மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஒருவர் மூலம் 406 பேருக்குக் கொரோனா பரவும்:

இந்திய மட்டுமல்லாமல் தமிழகத்திலும் கொரோனா 2ஆம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டங்களில் தனித்தனி கொரோனா கட்டளை ஆய்வு மையம் மேற்கொள்ளப்பட்டு கண்காணிக்கவும் நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை ஒரு தகவலை வெளியிட்டுள்ளது; அதில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஓர் ஆய்வில், கொரோனா தொற்று உள்ள ஒரு நபர், சிகிச்சைக்கு பின்னர் 30 நாள்கள் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளவில்லை என்றால்; அவர் மூலமாக 406 நபர்களுக்குக் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

எந்தவொரு நோய் பாதிப்புமே,  R0 எனப்படும் ஓர் அளவுகோலை வைத்துத்தான் அதன் பரவும்தன்மை கணக்கிடப்படும். அந்த வகையில், கோவிட் – 19 கொரோனா வைரஸின் R0 அளவு 1.5 முதல் 4 வரை இருக்கிறது. அதாவது R0 மதிப்பென்பது 2.5 என எடுத்துக்கொண்டால், கொரோனா தொற்று கொண்ட ஒரு நபர் 30 நாள்களில் 406 நபர்களுக்குத் தொற்றை பரப்புவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர். ஆகவே அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here