கொரோனாவால் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூபாய் 1 லட்சம் நிதி உதவி – அரசு அறிவிப்பு!!!

0

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி என்று மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

ரூபாய் 1 லட்சம் நிதிஉதவி:

கொரோனா இரண்டாவது அலையை தடுக்க மத்தியப் பிரதேசத்தின் 5 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கடந்த சில நாட்களாக புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கக் அம்மாநில முதல்-மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகின்றார்.

இதனை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், குழந்தைகளுக்கும் அம்மாநிலம் அதிக உதவிகளை செய்துவருகிறது. கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு மாதம் ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், இலவச கல்வி, இலவச குடும்ப அட்டை, வட்டியில்லா கடன் தரப்படும் என்றும் அறிவித்துள்ளது.

மேலும் மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா இரண்டாவது அலையில் இதுவரை மத்தியப்பிரதேசத்தில் 3,500 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே கொரோனா இரண்டாவது அலையில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என, அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here