என்னது..ஒரு கிலோ துவரம் பருப்பு இவ்ளோ விலையா?? தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு!!!

0

தமிழகத்தில் ரேஷன் டெண்டரில் ஒரு கிலோ துவரம் பருப்பிற்கு  நாமக்கல்லை சேர்ந்த கிறிஸ்டி நிறுவனம் ரூ.143 விலை நிர்ணயித்ததால், அந்த டெண்டரை ரத்து செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் புதிய டெண்டரையும் கோரியுள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழ் நாட்டில், ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு மிகக்குறைந்த விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 20 ஆயிரம் டன் துவரம் பருப்புக்கு டெண்டர் கோரப்பட்டது. கடைசியில் இந்த டெண்டர் நாமக்கல்லை சேர்ந்த கிறிஸ்டி நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டது. அந்த நிறுவனம்  ஒரு கிலோ துவரம் பருப்புக்கு ரூ.143 விலை நிர்ணயித்துள்ளது.

ஆனால், சந்தையிலேயே ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.100க்கு தான் விற்கப்பட்டுவருகிறது. இதையடுத்து அறப்போர் இயக்கம் தமிழக அரசிடம் இதுபற்றி புகார் அளித்தது. அந்த இயக்கம் தமிழக அரசிடம் இந்த டெண்டர் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டது. மேலும் இந்த டெண்டரை அந்நிறுவனத்திற்கு ஒப்படைத்தால் தமிழக அரசிற்கு ரூ.100 கோடி வரை இழப்பு நேரிடும் என்றும் எச்சரித்து இருந்தது.

இப்புகாரை விசாரித்த  தமிழ் நாடு அரசு கிறிஸ்டி நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட 20 ஆயிரம் டன் துவரம் பருப்பு டெண்டரை ரத்து செய்ய உத்தரவிட்டது. மேலும் புதிய டெண்டர் கோரி அறிவிப்பையும் தற்போது வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த முடிவை அறப்போர் இயக்கம் பாராட்டியுள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here