பாரத் பந்திற்கு ஆதரவு – தமிழகத்தில் கடைகள் அடைப்பு!!

0

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நாடு முழுவதும் இன்று முழு கடை அடைப்பு (பாரத் பந்த்) போராட்டம் நடைபெறுகிறது. தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. பொதுப்போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ரயில் நிலையங்கள், பேருந்து வழித்தடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாரத் பந்த்:

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியில் நீண்ட நாட்களாக பஞ்சாப், ஹரியானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள், பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். விளையாட்டு வீரர்கள் பலரும் வேளாண் சட்டங்களை திருப்பி பெறாவிட்டால் தங்களது விருதுகளை திருப்பி தருவோம் எனவும் எச்சரித்து உள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதற்கிடையில் இன்று விவசாயிகளின் கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் அமைதியான முறையில் காலை 11 மணிமுதல் மாலை 3 மணிவரை பாரத் பந்த் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் சுங்கச்சாவடிகளை அடைக்க போவதாகவும் விவசாயிகள் எச்சரித்து உள்ளனர். இதனால் அனைத்து மாநில எல்லைகளிலும், நெடுஞ்சாலைகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

நாடு முழுவதும் இதற்கு பலத்த ஆதரவு கிடைத்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், டெல்லி, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இன்று கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் காஞ்சிபுரம், விழுப்புரம் நீலகிரி, ஈரோடு மதுராந்தகம், கும்பகோணம், சீர்காழி, புதுக்கோட்டை, கோவை மதுரை, மன்னார்குடி, கோபிச்செட்டிப்பாளையம், திருவள்ளூர், திருவாரூர், மயிலாடுதுறை, மதுராந்தகம் ஆகிய மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் டிச. 27 முதல் லாரிகள் ஓடாது!!

இருப்பினும் ரயில், பேருந்து ஆகிய பொதுப்போக்குவரத்திற்கு எவ்வித இடையூரும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அரசுப்பேருந்துகள் வழக்கம் போல இயங்கி வருகின்றன. பல்வேறு கடைகள் அடைக்கப்பட்டு உள்ளதால் முக்கிய கடை வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here