அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100% இருக்கைகள் – தமிழக அரசு அனுமதி.!!!

0

அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100% இருக்கைகளுடன் பயணிகளை அனுமதித்து இயங்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் அறிவிப்பு:

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவை கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி நிறுத்தப்பட்டது. பின் பல தளர்வுகள் அறிவித்த நிலையில் பல கட்டுப்பாடுகளுடன் கடந்த செப்டம்பர் மாதம் 1-ம் தேதி மாவட்டத்திற்குள் பேருந்து சேவை தொடங்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதன்படி நிலையான வழிகாட்டுதல்களை பின்பற்றி செப்டம்பர் மாதம் 9-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு தொடங்கப்பட்டது. அதில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதலில் 60% இருக்கைகள் கொண்டு பேருந்துகள் இயங்க வேண்டும், 43 இருக்கைகள் கொண்ட பேருந்துகளில் 25 பயணிகள் மட்டும் அனுமதிக்க வேண்டும் போன்ற விதிமுறைகள் இருந்தன.

தமிழகத்தில் கடைகள் அடைப்பு!!

இந்நிலையில் இன்று தமிழக அரசு 100% இருக்கைகளுடன் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கலாம் என உத்தரவிட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here