தமிழகத்தில் டிச. 27 முதல் லாரிகள் ஓடாது – காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்!!

0

போக்குவரத்து துறையில் நடக்கும் ஊழல் காரணமாக தமிழகத்தில் வருகிற 27ம் தேதி முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப் போவதாக தென்மாநில லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சண்முகப்பா அறிவித்துள்ளனர்.

லாரிகள் வேலைநிறுத்தம்

தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் அவசர செயற்குழு கூட்டம் நடந்தது. அப்போது சம்மேளன தலைவர் குமாரசாமி, “வேககட்டுப்பாட்டு கருவி பொருத்தும் விவகாரத்தில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்த வேண்டும். ஒளிரும் பட்டை ஒட்டுவதில் சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தல்படி பழைய நிலையே தொடர வேண்டும் என்றார், இல்லையெனில் 27ம் தேதி முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப் போவதாக கூறினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது தொடர்பாக தென்மாநில லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சண்முகப்பா கூறியதாவது, ஜி.பி.எஸ். கருவியை பொறுத்தவரையில் 2015-ம் ஆண்டுக்கு பிறகு உற்பத்தியாளர்களே வாகனத்தில் பொருத்தி அனுப்புகிறார்கள். ஆனால் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் அதை ஏற்றுக்கொள்வது இல்லை.

நீதிமன்றம் ஐ.எஸ்.ஐ. தரச்சான்று உள்ள 49 நிறுவனங்களிடம் வாங்கலாம் என்று உத்தரவு போடப்பட்டிருந்த போதும், லாரி உரிமையாளர்களை போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், அதிகாரிகளும் குறிப்பிட்ட நிறுவனத்திடம் மட்டுமே ஜி.பி.எஸ்., வேகக்கட்டுப்பாட்டு கருவி, ஒளிரும் ஸ்டிக்கர் வாங்க கட்டாயப்படுத்தி மிரட்டி வருகின்றனர். மேலும் கர்நாடகத்தில் ரூ.1,500-க்கு விற்கும் வேகக்கட்டுப்பாட்டு கருவி தமிழகத்தில் ரூ.8,000 முதல் ரூ.10,000-க்கும், வெளிமாநிலங்களில் ரூ.600-க்கு விற்கப்படும் ஒளிரும் ஸ்டிக்கர் தமிழகத்தில் ரூ.6,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பாஜக.,வில் இணைந்த நடிகை விஜயசாந்தி!!

அவ்வாறு வாங்கினால் லாரி உரிமையாளர்களுக்கு ரூ.1000 கோடி கூடுதலாக செலவாகும். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், போக்குவரத்துத்துறை அதிகாரிகளின் செயல்பாட்டை கண்டித்தும் வருகிற 27-ந் தேதி காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், எங்களது போராட்டம் தொடங்கினால் தமிழகம் முழுவதும் 5 லட்சம் சரக்கு வாகனங்கள் ஓடாது, நாள் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்படும்.

அதே நேரத்தில் வேலைநிறுத்தம் தொடங்க இன்னும் 21 நாட்கள் உள்ளன. அதற்குள் அரசு எங்களது கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தால் அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார். இந்த ரூ.1,000 கோடி ஊழல் குறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்த முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here