BAN vs NZ 1st Test:  சுழலில் சிக்கிய நியூசிலாந்து.. வரலாற்று சாதனை படைத்த பங்களாதேஷ்!!

0
BAN vs NZ 1st Test:  சுழலில் சிக்கிய நியூசிலாந்து.. வரலாற்று சாதனை படைத்த பங்களாதேஷ்!!
பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சில்ஹெட் மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதில் பங்களாதேஷ் அணி தனது முதல் இன்னிங்சில் 310 ரன்கள் எடுத்தது. அதன்பிறகு விளையாடிய நியூசிலாந்து அணி 317 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 2வது இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணி 338 ரன்களை குவித்தது.
இதையடுத்து 332 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி, பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் அந்த அணி 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் பங்களாதேஷ் அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்துள்ளது. மேலும் வரலாற்றில் முதன்முறையாக, சொந்த மண்ணில் நியூசிலாந்தை வீழ்த்தி பங்களாதேஷ் சாதனை படைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here