ரேஷன் கார்டை மாற்ற சொல்லி வற்புறுத்தும் ராதிகா.., கடைசியில் வசமாக சிக்கிக்கொண்ட கோபி!!

0
ரேஷன் கார்டை மாற்ற சொல்லி வற்புறுத்தும் ராதிகா.., கடைசியில் வசமாக சிக்கிக்கொண்ட கோபி!!
ரேஷன் கார்டை மாற்ற சொல்லி வற்புறுத்தும் ராதிகா.., கடைசியில் வசமாக சிக்கிக்கொண்ட கோபி!!

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஒவ்வொரு நாளும் ஒரு காபிக்காக அல்லல்படும் கோபியின் நிலைமை தான் அல்டிமேட் காமெடியாக உள்ளது. இந்நிலையில் நேற்றைய எபிசோடில் கோபி பெயரில் பாக்கியா வீட்டுக்கு ஒரு போஸ்ட் வருகிறது. ஆனா ராமமூர்த்தி அந்த பேர்ல இங்க யாரும் இல்லை.

இனிமே அந்த பேர்ல எந்த போஸ்ட் வந்தாலும் இங்க கொண்டு வர வேண்டாம் என கரராக கூறுகிறார். வழியில் அந்த போஸ்ட் மேனை சந்திக்கும் கோபி எனக்கு போஸ்ட் ஏதும் வந்ததா என கேட்கிறார். போஸ்ட் மேன் ஆமாம் என சொல்லி பாக்கிய வீட்டில் நடந்ததை சொல்லுகிறார். பிறகு எனக்கு எந்த போஸ்ட் வந்தாலும் இந்த அட்ரஸ்க்கு கொண்டு வாங்க என சொல்லிவிடுகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

பிறகு வீட்டிற்குள் வரும் கோபி ராதிகாவிடம் போஸ்ட் மேன் சொன்னதை கூறுகிறார். இதற்கு ராதிகா உங்க அட்ரஸ், அப்புறம் ரேஷன் கார்டில் இருந்து உங்க பேர் எல்லாத்தையும் மாத்தணும் சொல்கிறார். உடனே கோபி பாக்யாவுக்கு கால் பண்ணி பேர மாத்தணும் சொல்ல, அதற்கு பாக்கியா நா கேட்டரிங்ல ஒர்க் பண்றேன் பேர் மாத்துறது ஏன் வேலை இல்லனு சொல்கிறார்.

பாக்கியா கொடுத்த அடியால் திணறி போன கோபி.,, கொந்தளிக்கும் ராதிகா.,, அனல்பறக்கும் எபிசோட்!!

பிறகு ராதிகா உங்க அப்பா, அம்மாவுக்கு கால் பண்ணாம எதுக்கு பாக்யாவுக்கு கால் பண்ணீங்க என கத்துகிறார். நீங்க பண்றது எனக்கு சுத்தமா பிடிக்கல என சொல்லிவிட்டு செல்கிறார். கோபி இப்படி ரெண்டு குடும்பத்துக்கு இடையில் மாட்டிகிட்டு படும் பாடை பார்க்கும் ரசிகர்கள் உங்களுக்கு இது தேவ தான் என கலாய்த்து வருகின்றனர். இது போன்ற காட்சிகள் தான் இன்றைய எபிசோட்டில் நடக்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here