அதிதி நீயாம்மா இப்படி.,SKவின் பிரின்ஸ்க்காக இவ்ளோ பண்ணிட்டு கடைசில சம்பளம் வாங்கலையாம்!!

0
அதிதி நீயாம்மா இப்படி.,SKவின் பிரின்ஸ்க்காக இவ்ளோ பண்ணிட்டு கடைசில சம்பளம் வாங்கலையாம்!!
அதிதி நீயாம்மா இப்படி.,SKவின் பிரின்ஸ்க்காக இவ்ளோ பண்ணிட்டு கடைசில சம்பளம் வாங்கலையாம்!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகையான அதிதி சங்கர், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்திற்காக செய்த காரியம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதிதி செய்த காரியம் :

தமிழ் சினிமாவில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகளான அதிதி சங்கர் தற்போது டாப் ஹீரோயினாக திகழ்ந்து வருகிறார். அதிதியின் அறிமுக நடிப்பில், இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த, விருமன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சமீப காலமாக நடிப்பு மட்டும் இல்லாமல் விளம்பர படங்களிலும் கவனம் செலுத்தி வரும் இவர், அடிக்கடி சில போட்டோ ஷுட்டுகளையும் நடத்துகிறார். அவர், மொக்க ஜோக் சொல்லுவார் என்பது அனைவருக்கும் தெரியும். விருமன் பட ஆடியோ விழாவில் கூட, இவர் சொன்ன ஜோக்குகள் பெரிய அளவில் கலாய்க்கப்பட்டது.

தளபதி 67இல் வில்லனாக மிரட்ட இருக்கும் சர்ச்சைக்குரிய நடிகர்.., அப்போ ஒரு சம்பவம் இருக்கு!!

இந்த நிலையில், அண்மையில் வெளியான சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தில், இடம்பெற்றிருந்த காமெடி காட்சிகள் அதிதி ஸ்கிரிப்ட்டில் உருவானதாம். அதாவது, இவர் அந்த படத்துக்காக ஜோக்ஸ் எழுதி கொடுத்துள்ளார். ஆனால், அதற்காக அவர் சம்பளமே வாங்கவில்லையாம். தற்போது இந்த தகவல் வெளியாகி, பலரும் அதிதியை மனதார பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here