ரேஷன் கார்டுதாரர்கள் குழப்பம் – இந்த மாதத்திற்கான பொருட்கள் கட்? அரசின் விளக்கத்தால் பயனர்கள் ஷாக்!!

0
ரேஷன் கார்டுதாரர்கள் குழப்பம் - இந்த மாதத்திற்கான பொருட்கள் கட்? அரசின் விளக்கத்தால் பயனர்கள் ஷாக்!!
ரேஷன் கார்டுதாரர்கள் குழப்பம் - இந்த மாதத்திற்கான பொருட்கள் கட்? அரசின் விளக்கத்தால் பயனர்கள் ஷாக்!!

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட, குறிப்பிட்ட குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் திட்டம் இந்த மாதம் தொடர்ந்து செயல்படுத்தப்படுமா? என அரசு விளக்கம் அளித்துள்ளது.

அரசு விளக்கம்:

மத்திய உணவு வழங்கல் துறை வாயிலாக, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த கொரோனா காலகட்டத்தில், அந்தியோதயா ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு இலவச ரேஷன் பொருட்கள் கிடைக்கும் என அரசு அறிவித்தது. அதன்படி இந்த கார்டுதாரர்களுக்கு 4 கிலோ மற்றும் ஒரு கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது இந்த திட்டம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு, செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைய இருந்தது. இதையடுத்து வருகிற டிசம்பர் வரை இந்த திட்டத்தை நீட்டிப்பதாக அரசு அண்மையில் அறிவித்தது. இதன்படி, அடுத்த 2 மாதங்களுக்கு இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும். ஆனால், கடந்த அக்டோபர் மாதத்திற்கான ரேஷன் பொருட்களே, இந்த கார்டுதாரர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை.

தமிழக TET தேர்வர்கள் கவனத்திற்கு., இவங்களுக்கு மட்டும் தேர்விலிருந்து விலக்கு.,கல்வித்துறை உறுதி!!

இது குறித்து விளக்கம் அளித்த, அதிகாரி ஒருவர் APL எனப்படும் மஞ்சள் நிற ரேஷன் அட்டை வைத்திருப்பவருக்கு மாதம் 7.30 கிலோ அரிசி கிடைக்கும். அதே நேரத்தில், இந்த கரிப் கல்யாண் திட்டத்தில் 4 கி வழங்கப்படுகிறது. இதுகுறித்து ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக, இதுவரை அக்டோபர் மாதத்திற்கான பொருட்கள் வழங்கப்பட வில்லை என்றும், விரைவில் 2 மாதத்திற்கான பொருட்களையும் சேர்த்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here