போதும் நிறுத்துங்க.., ராமமூர்த்தியிடம் கொந்தளித்த பாக்கியா.., செழியனால் வந்த புது பிரச்சனை!!!

0
பாக்கியலட்சுமி சீரியலில் இப்போது ஒட்டுமொத்த குடும்பமும் பாக்கியாவுக்கு எதிராக நிற்கின்றனர். ஜெனியின் அப்பா அவருக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்கும் விஷயம் தெரிந்து ஈஸ்வரி கொந்தளிக்கிறார். மேலும் அவர்களுக்கு முன்பு செழியனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என புரோக்கர் மூலம் ஏற்பாடு செய்கின்றன. இந்த விஷயம் பாக்கியா, செழியனுக்கு தெரிய வர அவர்கள் சத்தம் போடுகின்றன. மேலும் செழியன் எனக்கு ஜெனி தான் முக்கியம் என சொல்லிவிடுகிறார். செழியனுக்கு ஆதரவாக பாக்கியாவும் பேசுகிறார்.

அப்போது ஈஸ்வரி கோபி இருவரும் செழியன் வாழ்க்கை நாசமா போனதற்கு நீ தான் காரணம் என அவரை கண்டபடி சத்தம் போடுகின்றன. மேலும் பாக்கியாவுக்கு துணையாக இருந்த அவரது மாமா ராமமூர்த்தியும் பாக்கியாவை தனியாக அழைத்து செழியனை நீதான் திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என பேசுகிறார். இதனால் ஆத்திரமடைந்த பாக்கியா என் பையன் வாழ்க்கையை பார்க்க எனக்கு தெரியும். நீங்க யாரும் தலையிட வேண்டாம் என எதிர்த்து பேசுகிறார். இதைக் கேட்டு ராமமூர்த்தி எதுவும் பேச முடியாமல் அங்கிருந்து செல்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here