தெருத்தெருவாய் தேடி அலையும் ஈஸ்வரி, செழியன்.., ராதிகாவின் சூழ்ச்சியால் வந்த வினை.., இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ!!!

0
தெருத்தெருவாய் தேடி அலையும் ஈஸ்வரி, செழியன்.., ராதிகாவின் சூழ்ச்சியால் வந்த வினை.., இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ!!!
தெருத்தெருவாய் தேடி அலையும் ஈஸ்வரி, செழியன்.., ராதிகாவின் சூழ்ச்சியால் வந்த வினை.., இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ!!!

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி குடித்துவிட்டு வீட்டுக்கு போக வழி தெரியாமல் எழிலுக்கு கால் பண்ணி வந்து கூட்டிட்டு போகும் படி சொல்கிறார். அதுக்கு எழில் நீங்க யாரு?? உங்களை எதுக்கு நான் கூப்பிடனும் என கேட்டு போனை கட் பண்ண ஈஸ்வரி என்ன ஆச்சு என்று கேட்க எழில் விஷயத்தைச் சொல்கிறார். உடனே ஈஸ்வரியும் கோபியை அழைத்து வா என்று சொல்ல அவர் முடியாது என்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் இப்போது வெளியாகிய ப்ரோமோவில் கோபியை தேடி செழியனும், ஈஸ்வரியும் தெருத்தெருவாய் அலைகின்றனர். இன்னொரு பக்கம் ஈஸ்வரி கோபி தேடி செல்வதை பார்த்து, ராமமூர்த்தி இந்த வயசுல இது இவளுக்கெல்லாம் தேவையா என பாக்கியாவிடம் சொல்லி வருத்தப்படுகிறார். பின் கோபி எங்க தேடியும் கிடைக்காமல் ஒரு இடத்தில் நின்று ஈஸ்வரி செழியன் பேசிக்கொண்டிருக்கும் கோபி கார் நிற்கும் இடத்தை பார்க்கின்றனர்.

அங்கு சென்றால் கோபி குடிபோதையில் மயங்கி கிடக்கிறார். இதை பார்த்த ஈஸ்வரி பதறியடித்துக்கொண்டு அவரை வீட்டுக்கு அழைத்து வருகிறார். இந்த பக்கம் ராதிகா அவர் அம்மாவின் பேச்சை கேட்டுக்கொண்டு கோபிக்கு கால் பண்ணுகிறார். ஆனால் கோபி போனை எடுக்கவில்லை. இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது. இதை வைத்து பார்க்கும்போது அடுத்த வரும் எபிசோடில் ராதிகா தேவையில்லாமல் அவரது அம்மா பேச்சை கேட்டுக்கொண்டு இருக்கும் வாழ்க்கையை தொலைத்து விட்டு தெருவில் அலைவார் என்று தான் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here