குக் வித் கோமாளி 5 : போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ? ஆனா இந்த முறை இது எல்லாமே புதுசு!!

0
விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி என்றால் குக் வித் கோமாளி ஷோ தான். அதற்கு காரணமே சமையல் நிகழ்ச்சிகளுடன் கூடிய காமெடி தான். புகழ், பாலா, மணிமேகலை, சிவாங்கி ஆகியோர் இந்த நிகழ்ச்சி மூலம் தான் பிரபலமடைந்தனர். இந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் 5 குறித்து முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
அதாவது, குக் வித் கோமாளி சீசன் 5 படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் துவங்கியது. அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில், CWC சீசன் 5ல் கலந்துகொண்டிருக்கும் போட்டியாளர்கள் லிஸ்ட்டை கீழ் காணலாம்.
போட்டியாளர்கள் லிஸ்ட்:

தொகுப்பாளினி பிரியங்கா, Youtuber இர்ஃபான், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, வெளிநாட்டு விவசாயி, கிருஷ்ணா மெக்கன்சி, நடிகர் VTV கணேஷ், நடிகை திவ்யா துரைசாமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வசந்த்,  நடிகை ஷாலின் ஜோயா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here