தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் எல்லாமே அட்வான்ஸாகி கொண்டு வருகிறது. அதே போல் மக்களிடம் இருந்து நூதனமான திருட்டு சம்பவங்களும் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் இந்த டிஜிட்டல் மையத்தை யூஸ் செய்து பல போலி ஆவணங்களையும் தயாரித்து சிலர் குற்றங்களில் இருந்து தப்பித்து விடுகின்றனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அந்த வகையில் போலி ஆவணங்கள் மூலம் பலரும் தமிழகத்தில் சிம் கார்டுகளை பயன்படுத்தி வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வந்த வண்ணம் இருந்துள்ளது. இதனால் விசாரணை மேற்கொண்ட போலீஸ் அதிகாரிகள் யார் யாரெல்லாம் போலி ஆவணத்தின் மூலம் சிம் வாங்கியுள்ளனர் என ஒரு அறிக்கை தயாரித்தனர்.
அதன்படி இதுவரை தமிழ்நாட்டில் 55,982 போலி சிம் கார்டுகளை முடக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இனி வரும் நாட்களில் போலி சிம் கார்டு விற்பவர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.