என்னது எனக்கு தலைக்கனமா? அப்ப அவங்களுக்கு எவ்வளவு இருக்கும்.., டென்ஷனான இளையராஜா!!

0
என்னது எனக்கு தலைக்கனமா? அப்ப அவங்களுக்கு எவ்வளவு இருக்கும்.., டென்ஷனான இளையராஜா!!
என்னது எனக்கு தலைக்கனமா? அப்ப அவங்களுக்கு எவ்வளவு இருக்கும்.., டென்ஷனான இளையராஜா!!

தமிழ் சினிமாவில் 70ஸ்,80ஸ் காலகட்டத்தில் இசையில் இளையராஜா கொடி தான் பறந்து கொண்டிருந்தது. அவர் இல்லை என்றால் படம் இல்லை என்ற அளவுக்கு அந்த காலகட்டம் இருந்தது. அந்த அளவுக்கு அவருடைய இசை அனைவராலும் போற்றப்பட்டது. அன்னக்கிளியில் ஆரம்பித்த அவர் இசை பயணம் தற்போது வரை நின்றபாடில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் இசையமைத்து பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் கூட விடுதலை படத்துக்கு அவர் இசை பெரிதளவு பேசப்பட்டது. சமீபத்தில் அமேசானில் வெளியான மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜி தொடரிலும் இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படி இசையின் மூச்சிலே வாழ்க்கையை வாழ்ந்து வரும் இவரை ஜேம்ஸ் வசந்தன் உட்பட பல சினிமா பிரபலங்கள் தலைக்கனம் பிடித்தவர் என்று சொல்கிறார்கள்.

தெருத்தெருவாய் தேடி அலையும் ஈஸ்வரி, செழியன்.., ராதிகாவின் சூழ்ச்சியால் வந்த வினை.., இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ!!!

இது குறித்து சமீபத்தில் இளையராஜா சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதில், நான் இசையின் பாதையில் சென்று கொண்டிருக்கிறேன். ஒரு படத்துக்கு இசையமைக்கும் போது, என்னுடைய கவனம் இசையின் மேல் தான் இருக்கும். மற்றதெல்லாம் பற்றி எனக்கு கவலை இல்லை. சினிமாவில் இருக்கும் பலரும் எனக்கு தலைக்கனம் அதிகம் என்று தான் சொல்கிறார்கள். அப்படி சொல்பவர்களுக்கு எவ்வளவு தலைக்கனம் இருக்கும் என்று டென்ஷனாக பேசியுள்ளார். தற்போது அவர் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here