‘என் வாழ்க்கையை சீரழிச்சதுக்கு உன்ன சாவடிச்சு இருக்கணும்’ – பாக்கியலட்சுமி ஜெனியின் குமுறல் வீடியோ!!

0

பாக்கியலட்சுமி சீரியல் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜெனி மற்றும் இனியா இருவரும் இணைந்து புதிய ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளனர்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து பல விறுவிறுப்பான சம்பவங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தற்போது கோபி மாட்டிக்கொள்ளும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. முதலில் ராதிகாவிடம் மாட்டுவாரா?? இல்லை பாக்கியாவிடம் மாட்டுவாரா?? என்ற ஆர்வம் அனைவருக்குமே உள்ளது.

இதிலும் ஒரு கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருவதால் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வந்தது. அதுவும் கோபி பாக்கியாவை உதாசீனப்படுத்துவதும், இதனால் எழில் கோவமடைவதும் என பல பரபரப்பான கதைக்களத்தால் நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

இதில் முக்கிய வேடத்தில் நடிப்பவர்கள் தான் திவ்யா, நேகா. தொடர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர்கள் பல ரீல்ஸ் விடீயோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

பாக்கியலட்சுமி சீரியலிலும் நேகாவுக்கு பொருத்தமான சுட்டித்தனமான காதாபாத்திரம் தான். மேலும் ஜெனியாக நடித்து வரும் திவ்யா வழக்கமான மருமகளாக இல்லாமல் தனது அத்தையின் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருந்து வருகிறார்.

அதனாலேயே இவர்களுக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இனியாவை கண்டபடி திட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Nehah Menon❤ (@_nehah_official_)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here