வீட்டு வேலைக்காரியையும் விட்டு வைக்காத பாக்கியலட்சுமி கோபி – அப்பப்பா.., என்ன ஒரு ஆட்டம்!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் தற்போது அந்த சீரியலில் வேலைக்காரியாக நடித்து வரும் செல்வி அக்கா உடன் இணைந்து ரீல்ஸ் செய்துள்ளார். இதனால் வேலைக்காரிய கூட விட்டுவைக்க மாட்டிங்களா?? என்று பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

பாக்கியலட்சுமி கோபி

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ராதிகா பாக்கியாவுடன் சொன்னது போலவே அந்த வீட்டை வாங்க ஒத்துக்கொள்கிறார். இதனால் கடுப்பாகும் கோபி வீட்டிற்கு சென்று கேட்க தனக்கு அந்த வீட்டை வாங்குவதில் எந்த பிரச்சனை இருப்பதாக தெரியவில்லை என்று சொல்கின்றார்.

இதனால் கோபி கோவமடைகிறார். இதில் கோபி யாரிடம் முதலில் மாட்ட போகிறார் என்ற ஆர்வம் அனைவர்க்கும் உள்ளது. ராதிகாவிற்கு உண்மை தெரிந்தால் என்ன நடக்குமோ?? என பல விறுவிறுப்பான கட்டங்களுடன் நகர்ந்துகொண்டுள்ளது. ஏற்கனவே கோபியின் கதாபாத்திரத்தால் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

என்ன தான் கோபி சீரியலில் மிகவும் ஸ்ட்ரிக்ட்டாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் அவர் மிகவும் ஜாலி டைப் தானாம். அவரது இன்ஸ்டா பக்கத்தை பார்த்தாலே நமக்கு தெரியும். மேலும் கேரளாவை சேர்ந்த இவர் சன் டிவியில் பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த பாக்கியலட்சுமி சீரியலில் வேலைக்காரியாக நடிக்கும் செல்வி அக்காவுடன் இணைந்து தொட்டால் பூ மலரும் பாடலுக்கு ஜோடியாக ரீல்ஸ் செய்துள்ளனர். இதனால் பலரும் வேலைக்காரிய கூட விட்டு வைக்கலையா?? என்று நக்கலடித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here