ராதிகாவும் கோபியும் நீண்ட நாட்கள் தொடர்பில் இருப்பதை கண்டுபிடிக்கும் கோபியின் அப்பா – அடுத்து நடக்க போகும் விபரீதம் என்ன??

0

பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் பல விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்து வருகிறது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ஜெனிக்கு அபார்சன் ஆன நிலையில் குடும்பம் மொத்தமும் கஷ்டத்தில் மூழ்கியது. மேலும் ஜெனி தன் வீட்டிற்கு கிளம்பி விட்டார். இப்பொழுது தான் செழியனுக்கு தான் செய்த தவறு தெரிய ஆரம்பிக்கிறது. அது மட்டுமில்லாமல் ஜெனியை பார்க்க பாக்கியாவும் அவரது மாமனாரும் செல்கின்றனர்.

கோபி தான் உள்ளே வரவில்லை நீ மட்டும் போயிட்டு வா என்று சொல்கிறார். பாக்கியாவும் ஜெனிக்கு அவரது அப்பா அம்மாவிற்கு ஆறுதல் சொல்லி விட்டு கிளம்புகிறார். அடுத்ததாக கோவிலுக்கு செல்ல கோபி ராதிகாவிற்கு குங்குமம் வைத்து விடுவதை பார்த்து விடுகிறார் அவரது அப்பா.

கோபியின் பின்னாடியே செல்ல அதற்குள் காரில் ஏறி சென்று விடுகின்றனர். இதனால் உச்சகட்ட கோவமடைகிறார் கோபியின் அப்பா. அப்பொழுது தான் அவருக்கு ஒவ்வொன்றாக நியாபகத்திற்கு வருகிறது.

ராதிகா இங்கு வருகிறேன் என்று சொன்னாலே கோபியின் நடவடிக்கை கொஞ்சம் கொஞ்சமாக மாறியது அவரின் நினைவுக்கு வருகிறது. மேலும் நீண்ட காலமாகவே ராதிகாவுடன் கோபி தொடர்பில் இருப்பது தெரிந்து விடுகிறது. ராதிகாவும் பாக்கியாவை தெரிந்தே துரோகம் செய்கிறாரா?? என்று ஆத்திரமடைகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here