சிவகார்த்திக்கேயனின் பிறந்தநாளில் வெளியான ‘அயலான்’ படத்தின் பாடல் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0

நடிகர் சிவகார்த்திக்கேயன் நடித்துள்ள ‘அயலான்’ படத்தில், இசையமைப்பாளர் ஏஆர்.ரஹ்மான் இசையில் அவர் பாடி இசையமைத்துள்ள பாடல் தற்போது இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

அயலான் படத்தின் பாடல் வெளியீடு

இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திக்கேயன் நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள திரைப்படம் அயலான். அறிவியல் சார்ந்த திரைக்கதையை 24AM ஸ்டுடியோஸ் இயக்கியுள்ளது. இந்தப்படத்தில் நடிகர் சிவகார்த்திக்கேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் இந்த படத்தில் நடித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த படம் நடிகர் சிவகார்த்திக்கேயனுக்கு 13வது திரைப்படமாகும். பொதுவாக நகைச்சுவை திரைப்படங்களில் நடித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் தற்பொழுது வித்தியாசமான கதைகளை தேடி நடித்து வருகிறார். திரைப்படங்களில் தோன்றும் ஒவ்வொரு கதாநாயகர்களுக்கும் உள்ள பொதுவான ஆசை இசைப்புயல் ஏஆர்.ரஹ்மான் இசையில் ஒரு படமாவது நடிக்கவேண்டும் என்பது தான். நடிகர் சிவகார்த்திக்கேயனும் இந்த ஆசையை பல்வேறு மேடைகளில் தெரிவித்திருந்தார்.

தேசிய கொடியை அவமதித்தல் 3 ஆண்டு சிறை – மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி!!

தற்போது சிவகார்த்திக்கேயன் நடித்திருக்கும் ‘அயலான்’ திரைப்படத்தை ஏஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. வழக்கம் போல பின்னணி இசையில் கலக்கியிருக்கும் ஏஆர்.ரஹ்மான் தனது சொந்த குரலில் பாடியுள்ள ஒரு பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

மார்ச் மாதத்தில் சிவகார்த்திக்கேயனின் ‘டாக்டர்’ படம் வெளியாகவுள்ள நிலையில் ‘அயலான்’ படம் டிசம்பர் மாதம் திரையிடப்படும் என தகவல்கள் பெறப்பட்டுள்ளது. இன்று பிப்ரவரி 17ம் தேதியான நடிகர் சிவகார்த்திக்கேயனின் பிறந்தநாளை முன்னிட்டு அயலான் படத்தில் ‘சகோ’ என்று துவங்கும் பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here