தேசிய கொடியை அவமதித்தல் 3 ஆண்டு சிறை – மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி!!

0

நாட்டின் தேசிய கொடியை அவமதிக்க கூடாது என்றும் அவ்வாறு செய்பவர்கள் மீது 3 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக அறிவித்துள்ளது.

தேசிய கொடி:

நாட்டின் தேசிய கொடி, தேசிய கீதம் உள்ளிட்டவைகளுக்கு அனைவரும் கட்டாய முறையில் மரியாதையை செலுத்த வேண்டும். மேலும் சில நேரங்களில் ரோட்டில் சிலர் தேசிய கொடியை வீசி விட்டு செல்வார்கள். இது நம் தேசத்திற்கு நம் செய்யும் அவமரியாதை. தற்போது இதனை தடுக்கும் வகையில் பல அதிரடியான சட்டங்களை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, தேசிய கொடிகள் காகிதம் மற்றும் பிளாஸ்டிக்கில் வெளிவரும். ஆனால் பிளாஸ்டிக்கில் உள்ள தேசியக்கொடி பூமிக்குள் மக்குவதற்கு காலம் ஆகும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எனவே இதனை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் தேசியக்கொடியை பயன்படுத்துவதற்கு தடைவிதித்துள்ளது. மேலும் மக்கள் அனைவரும் காகிதத்தில் உருவான தேசிய கொடியை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் இனி யாராவது தேசியக்கொடியை ரோட்டில் வீசுவது அல்லது அதனை அவமானப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு 3 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

விநாயகர் டாலருடன் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட ரிஹானா – போலீசில் பரபரப்பு புகார்!!

அதுமட்டுமல்லாமல் தேசிய கீதம் பாடும் பொழுது யாரவது இடையூறு செய்தால் அவருக்கும் 3 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனை இந்தியா கொடி குறியீடு 2002 மற்றும் தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு சட்டம் 1971 ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச பகுதிகளில் இதனை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here