ஆசிய கோப்பை 2023 அட்டவணை வெளியீடு…, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முதல் போட்டி!!

0
ஆசிய கோப்பை 2023 அட்டவணை வெளியீடு..., பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முதல் போட்டி!!
ஆசிய கோப்பை 2023 அட்டவணை வெளியீடு..., பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முதல் போட்டி!!

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக தனது முதல் போட்டியை விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆசிய கோப்பை 2023:

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரை இலங்கை அணி தட்டி சென்றது. இதனை தொடர்ந்து, நடப்பு ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடரானது, வரும் செப்டம்பர் மாதம் 2ம் தேதி முதல் 17ம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கு, இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லுமா என்பது இன்றளவும் பெரும் கேள்வி குறியாகவே உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில், இந்த தொடர் நடைபெறும் போட்டிக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட அணிகளை கொண்டு இந்த அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. இதில், குரூப் A பிரிவில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதி சுற்றின் அடிப்படையில் வரும் அணி இடம்பெற்றுள்ளது.

இந்திய அணிக்கு திரும்ப இருக்கும் ரிஷப் பந்த்…, எப்போ தெரியுமா?? வெளியான அப்டேட்!!

குரூப் B யில், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. 13 போட்டிகளை உள்ளடக்கிய இந்த தொடரில், இந்திய அணியானது செப்டம்பர் 3ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த தொடரில், செப்டம்பர் 9ம் தேதி வரை லீக் சுற்றுகளும், சூப்பர் 4 சுற்றுகள் 10ம் தேதி முதல் 15 தேதி வரையும் இறுதி போட்டி 17ம் தேதியும் நடைபெற இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here