இந்திய அணிக்கு திரும்ப இருக்கும் ரிஷப் பந்த்…, எப்போ தெரியுமா?? வெளியான அப்டேட்!!

0
இந்திய அணிக்கு திரும்ப இருக்கும் ரிஷப் பந்த்..., எப்போ தெரியுமா?? வெளியான அப்டேட்!!
இந்திய அணிக்கு திரும்ப இருக்கும் ரிஷப் பந்த்..., எப்போ தெரியுமா?? வெளியான அப்டேட்!!

அண்மையில் நடந்த பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகை செய்த அதிரடி வீரர் ரிஷப் பந்த் யாரும் எதிர்பாராத விதமாக டெல்லியில் விபத்துக்குள்ளானார். அந்த விபத்தில் இவருக்கு நெற்றி, முதுகு, கால் போன்ற இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் இவர் தற்போது நடைபெறவுள்ள IPL போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவ செலவை கிரிக்கெட் சங்கம் ஏற்றுக்கொள்ளும் என்றும் BCCI அறிவித்திருந்தது. மருத்துவமனையில் உள்ள ரிஷப் பந்த்க்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது.

அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்த ஸ்டீவ் ஸ்மித்…, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அசத்தல்!!

இதனால் ரிஷப் முழுமையாக குணமாக 5, 6 மாதங்கள் ஆகும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே இந்த ஆண்டு நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ரிஷப் பங்கேற்கவில்லை என்றால் இந்திய அணிக்கு மிகவும் சிக்கலான நிலை தான். ஆனால் இவர் WTC இறுதிப்போட்டியில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here