இணையத்தை தெறிக்க விடும் அஷ்வினின் ‘குட்டி பட்டாஸ்’ – வைரலாகும் வீடியோ!!

0

குக் வித் கோமாளி நடிகர் அஷ்வின் மற்றும் பிகில் பட நடிகை ரெபா மோனிகா ஜான் நடித்துள்ள ஆல்பம் பாடல் ‘குட்டி பட்டாஸ்’. இந்த பாடல் நேற்று இணையத்தில் வெளியாகி 2 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

குட்டி பட்டாஸ்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளர் நடிகர் அஷ்வின் குமார் நடித்துள்ள ஆல்பம் பாடல் தான் குட்டி பட்டாஸ். இந்த பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி எழுதி அதை இசையமைத்துள்ளார். இந்த பாடலை சந்தோஷ் மற்றும் சூப்பர் சிங்கர் ரக்ஷிதா ஆகியோர் பாடியுள்ளனர். இதில் நடிகர் அஷ்வின் குமார் மற்றும் பிகில் படத்தில் நடித்துள்ள நடிகை ரெபா மோனிகா ஜான் ஆகியோர் நடித்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சாண்டி மாஸ்டர் இந்த பாடலுக்கான நடனத்தை வடிவமைத்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னதாக அஷ்வின் குமார் நடிப்பில் குட்டி பட்டாஸ் ஆல்பம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் நேற்று மாலை இந்த பாடல் இணையத்தில் வெளியானது.  நான்கு நிமிடங்கள் ஓடும் இந்த பாடலில் முன்னாள் காதலர்களான அஷ்வின் மற்றும் ரெபா மோனிகா ஜான் ஒரு திருமண விழாவில் சந்திக்கின்றனர்.

தமிழகத்தில் இந்த 2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

அப்போது இருவருக்குமிடையே சில சண்டைகளுடன் குட்டி குட்டி ரொமான்ஸும் நடக்கிறது. பாடலின் முடிவில் இருவரும் சேர்ந்து விடுகிறார்கள். இந்த வகையில் குட்டி பட்டாசு பாடல் வெளியாகியுள்ளது. பல கியூட்டான ரியாக்ஸனுடன் அஷ்வின் அழகாக நடித்துள்ளார்.  இந்த பாடலில் நடிகை ரெபா மோனிகாவும் அழகாக உள்ளார். பாடலின் இடையில் சாண்டி மாஸ்டர் வந்து கலகலப்பூட்டுகிறார்.

சந்தோஷ் இசையில் வெளியான இந்த பாடல் மீண்டும் மீண்டுமாக கேட்கத்தூண்டும் வகையில் உள்ளது. இணையத்தில் வெளியான குட்டி பட்டாஸ் பாடல் இதுவரை 2 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here