‘எங்க தலைவிக்கு தில்ல பாத்தியா’ – வைரலாகும் ஷெரினின் வீடியோ!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ரீஎண்ட்ரி கொடுத்துள்ள நடிகை ஷெரின் தற்போது ஒரு நகைச்சுவையான வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார். அந்த விடீயோவினை பார்த்த ரசிகர்கள் அவரை “தலைவிக்கு தில்ல பாத்தியா” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

நடிகை ஷெரின்

தமிழ் திரையுலகில் முதன் முதலாக நடிகர் தனுஷ் உடன் “துள்ளுவதோ இளமை” என்ற திரைப்படத்தில் நடித்தவர் தான் ஷெரின். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அறிமுகமாகி தனது முதல் திரைப்படத்தின் மூலமாகவே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றார்.

ஏப்ரல் 1 முதல் அத்யாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு – அதிர்ச்சியில் மக்கள்!!

இதனை அடுத்து ஷெரின் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து புகழ் அடைந்தார். பின், சில வருடங்களில் தமிழ் திரையினை விட்டு காணாமல் போன ஷெரின் “பீமா” திரைப்படத்தில் ஒரு பாடலிற்கு நடமாடினார். அதற்கு பின்பாக கூட இவர் பல திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார்.

இதனை அடுத்து இவர் பல ஆண்டுகளுக்கு பின்பாக இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பிக் பாஸ் 3” நிகழ்ச்சியில் பங்கு கொண்டார். அந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் சண்டைகளில் ஈடுபட்டாலும், பின்பு அனைவரிடமும் சகஜமாக பழகி மக்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றார்.

அந்த வீட்டில் இருக்கும் போது இவர் சக போட்டியாளரான தர்ஷனை காதலித்ததாக கூறப்பட்டது. இது குறித்து இருவருமே ஒரு பதிலையும் கூறவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு “சிறந்த தோழி” என்ற விருது வழங்கப்பட்டது. அதே போல் மூன்றாவது ரன்னர் அப் இவர் தான்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படியாக இருக்க ஷெரின் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விடீயோவினை பதிவிட்டுள்ளார். அதில் தனது ரசிகர்கள் தன்னை எப்படி பார்ப்பார்கள் என்றும் தனது ஹெடர்ஸ் (Haters) தன்னை எப்படி பார்ப்பார்கள் என்பது குறித்து அந்த விடீயோவினை பதிவிட்டுள்ளார். அதில் தனது ஹெடர்ஸ் தன்னை வித விதமான மிருகங்களாக தான் பார்ப்பார்கள் என்று அந்த விடீயோவில பதிவிட்டுள்ளார்.

முழு விடீயோவினை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here