தமிழகத்தில் இந்த 2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

0
rain
Pedestrians use umbrellas to shelter from heavy rain in Kuala Lumpur on March 20, 2015. Malaysia is currently experiencing a hot and dry weather spell. AFP PHOTO / MOHD RASFAN

தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தொடர்ந்து மற்ற மாநிலங்களில் வறண்ட வானிலை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை அறிக்கை

இன்று தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமான மழையும் ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தொடர்ந்து நாளை திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அடுத்த வாரம் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை காணப்படும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, சாத்தான் குளம் பகுதிகளில் மழையளவு பதிவு செய்யப்பட்டுள்ளது.

என்ன லாஸ்லியா இப்படி ஆகிட்டீங்க?? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

வரும் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் வட மேற்கு திசையிலிருந்து காற்று தமிழகம் நோக்கி வீசக்கூடும் என்பதால் சென்னை, திருவள்ளுர், கடலூர், வேலூர், நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர், சேலம், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். இன்று முதல் அடுத்து வரவுள்ள மூன்று நாட்களுக்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here