நடிகர் ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’….,மார்ச் 31 இல் டீசர் ரிலீஸ்…,

0
நடிகர் ஆர்யாவின் 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்'....,மார்ச் 31 இல் டீசர் ரிலீஸ்...,
நடிகர் ஆர்யாவின் 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்'....,மார்ச் 31 இல் டீசர் ரிலீஸ்...,

நடிகர் ஆர்யா நடித்துள்ள ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ என்ற திரைப்படத்தின் டீசர் மார்ச் 31 ஆம் தேதியன்று வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

டீசர் ரிலீஸ்

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்து வரும் 34 ஆவது திரைப்படம் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’. இந்த திரைப்படம் ஆக்ஷன் மற்றும் குடும்பப் பின்னணி கொண்ட கதைக்களத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

‘தசரா’ படப்பிடிப்பு புகைப்படத்தை பகிர்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ்….,இந்த லுக்கும் நல்லா தான் இருக்கேப்பா….,

நடிகர் சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தில் அறிமுகமான நடிகை சித்தி இட்னானி இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கி நடைபெற்று வந்த நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ திரைப்படத்திற்கான டீசர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, வரும் மார்ச் 31 ஆம் தேதியன்று இப்படத்திற்கா டீசர் வெளியாகும். இதை தொடர்ந்து, ட்ரைலரை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here