தமிழகத்தில் நாளை (ஆக.5) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (ஆக.5) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின் வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஆக.5) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின் வாரியம் அறிவிப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 5ம் தேதி குழித்துறை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அத்துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை:

தமிழகத்தில் தடையில்லா மின்சாரத்தை வழங்கும் நோக்கில் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றுதல் வயர்களை சரி செய்தல், பழுதடைந்த மின் கம்பிகளை மாற்றுதல், மின் இணைப்புகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய பணிகள் நடைபெறும் போது மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காக மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து அப்பகுதி செயற்பொறியாளர்கள் மூலம் மின் பயனர்களுக்கு முன்னறிவிப்பும் செய்யப்பட்டு வருகிறது.

இதனை அறிந்து மின் பயனர்கள் மின் உதவியுடன் செய்யப்படும் வேலைகளை முன்னதாகவே முடித்து விடுகின்றனர். மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை (ஆகஸ்ட் 5ம் தேதி ) கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அத்துடன் அப்பகுதியில் மின் பாதைகளுக்கும் இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணிகளும் நடைபெற உள்ளது. அதனால் ஆலுவிளை, மேல்புறம், மருதங்கோடு, கோட்டவிளை, செம்மங்காலை, இடைக்கோடு, மாலைக் கோடு ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் புலியூர் சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, பளுகல், களியக்காவிளை, மடிச்சல், பாலவிளை, பெருந்தெரு, பழவார், விளவங்கோடு, கழுவன்திட்டை, குழித்துறை, இடைத்தெரு ஆகிய பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று குழித்துறை பகுதி மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளது. மேலும் மின் கம்பங்கள் சரி செய்யும் பணிகள் நடைபெறும் போது பொதுமக்கள் ஒத்துழைப்பை நல்கும் படி கேட்டுக் கொண்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here