தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் நிறுத்தம்? வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!

0
தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் நிறுத்தம்? வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!
தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் நிறுத்தம்? வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!

சென்னையில் 4 வழிச்சாலை விரிவாக்க பணி காரணமாக ஈசிஆரில் 4 சுங்கச்சாவடிகளில் கட்டணவசூல் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் எந்தெந்த வழித்தடங்களில் சுங்கச்சாவடி வசூல் கட்டணம் நிறுத்தப்பட்டுள்ளது என்ற முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

சுங்கச்சாவடி கட்டணம்:

தமிழகத்தில் 27 சுங்கச்சாவடிகள் உள்பட இந்தியாவில் மொத்தம் 460க்கும் அதிகமான சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில் கொரோனா காலகட்டத்தில் மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் அதற்கு தகுந்தாற் போல அரசும் நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. மேலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதனால் சுங்கச்சாவடி கட்டணம் சில மாதங்களுக்கு முன் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் 4 வழிச்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. அதனால் ஈசிஆர் சாலையில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் கட்டணவசூல் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாமல்லபுரம் – திருக்கழுக்குன்றம் சாலை, ஓஎம்ஆர் சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் நிறுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் வெங்கம்பாக்கம், மரக்காணம் அருகே அனுமந்தையில் உள்ள சுங்கச்சாவடிகளிலும் கட்டண வசூல் நிறுத்தப்பட்டுள்ளது.

அதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் சென்னை பழைய மகாபலிபுரம் சாலை நாவலூரில் சுங்க கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் தற்போது பராமரிப்பு பணிகள் காரணமாக சுங்க கட்டணம் வசூல் ரத்து செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்து இருக்கின்றனர். பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மீண்டும் ஏற்கனவே உயர்த்தப்பட்டபடி சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here