தமிழக அரசின் புதிய சுற்றுலா திட்டம் – திருப்பதி பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ்!

0
தமிழக அரசின் புதிய சுற்றுலா திட்டம் - திருப்பதி பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ்!
தமிழக அரசின் புதிய சுற்றுலா திட்டம் - திருப்பதி பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ்!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள். அந்த வகையில் தமிழகத்தில் முக்கிய நகரங்களில் இருந்து திருப்பதி செல்ல தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தினசரி திருப்பதி சுற்றுலாவை அறிமுகம் செய்துள்ளது.

திருப்பதி சுற்றுலா:

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக இருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் கொரோனவால் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்த நிலையில், தற்போது கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து மீண்டும் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு படையெடுத்துள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே சென்னையில் இருந்து திருப்பதிக்கு தினசரி சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.அதனை தொடர்ந்து தமிழகத்தில் திருச்சி, மதுரை, சேலம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய முக்கிய நகரங்களில் இருந்து திருப்பதிக்கு சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வரின் வழிகாட்டுதல்படி சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தினசரி திருப்பதி சுற்றுலாவை மக்களின் ஆதரவோடு இயக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருச்சி, மதுரை, சேலம் மற்றும் கோயம்புத்தூர் போன்ற இடங்களில் இருந்து தினசரி திருப்பதி சுற்றுலாவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இந்த சுற்றுலாவில் பங்கேற்கும் அனைத்து பயணிகளுக்கும், இருவேளை சைவ உணவு, குளிர்சாதன சொகுசு பேருந்து வசதி மற்றும் சிறப்பு தரிசன பயணச்சீட்டு உட்பட கட்டணமாக திருச்சி – பெரியவர்கள் ரூ.3,300 – சிறியவர்கள் ரூ.3,000, சேலம் – பெரியவர்கள் ரூ.3,300 – சிறியவர்கள் ரூ.3,000, மதுரை- பெரியவர்கள் ரூ.4,000 – சிறியவர்கள் ரூ.3,700, கோயம்புத்தூர் – பெரியவர்கள் ரூ.4,000 – சிறியவர்கள் ரூ.3,700, (4 வயதிலிருந்து 10 வயதுக்கு உட்பட்டோருக்கு) நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இச்சுற்றுலாவில் பயணம் செய்ய 7 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு மேலாளர், ஓட்டல் தமிழ்நாடு – திருச்சி 0431-2414346, 9176995862 மேலாளர், ஓட்டல் தமிழ்நாடு – சேலம் 04281-22335, 223334, 9176995823 மேலாளர், ஓட்டல் தமிழ்நாடு – மதுரை 0452-2337471, 9176995822 மேலாளர், ஓட்டல் தமிழ்நாடு – கோயம்புத்தூர் 0422-2302176, 9176995852 தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here