தமிழகத்தில் தொடர்ந்து வரும் கனமழை – தடுப்பு நடவடிக்கைகளுக்கான எச்சரிக்கை!

0
தமிழகத்தில் தொடர்ந்து வரும் கனமழை - தடுப்பு நடவடிக்கைகளுக்கான எச்சரிக்கை!
தமிழகத்தில் தொடர்ந்து வரும் கனமழை - தடுப்பு நடவடிக்கைகளுக்கான எச்சரிக்கை!

தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணத்தால், ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் உடனடியாக ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கனமழை:

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. கடந்த 29 ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த பருவமழை 103 விழுக்காடாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக தெற்கு மற்றும் மத்திய இந்திய பகுதிகளில் மழை பொழிவு அதிகமாக இருக்கும் என்றும், வடகிழக்கு பகுதிகளில் குறைவாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே தமிழகத்தில் பல மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு சில வாரமாக தமிழகத்தில் அநேக இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை காரணமாக மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை இருந்து வருகிறது. மேலும் பள்ளி செல்லும் மாணவர்கள் தொடர் கனமழை பெய்து வருவதால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தமிழகத்தில் பருவமழை காலங்களில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது விவசாயிகள் தான். கனமழை காரணமாக விளை நிலங்களில் மழை நீர் தேங்குவதால் பயிர்கள் அழுகிவிடும் நிலை ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் அதிக நஷ்டம் ஏற்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர் நிலங்களை நேரடியாக கள ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் நெல் மூட்டைகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படாத வகையில் தார்பாய்கள் கொண்டு மூட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here