தேசிய விருது பெற்ற பிரபலங்களுக்கு குவியும் வாழ்த்து – வைரலாகும் ட்வீட்ஸ்!!

0

சினிமாத்துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கான தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள பிரபலங்களுக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

பிரபலங்களின் வாழ்த்துக்கள்

சினிமாவில் சிறந்து விளங்கியவர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசின் சார்பாக தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் சிறந்த சினிமாவுக்கான தேசிய விருதுகள் நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. அதில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் தனுசுக்கும், சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது நடிகர் விஜய் சேதுபதிக்கும், சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது வெற்றிமாறனின் ‘அசுரன்’ திரைப்படத்துக்கும் அறிவிக்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

24 நேரத்தில் 40 ஆயிரத்தை தாண்டிய கொரோனா – சுகாதாரத்துறை தகவல்!!

அந்த வகையில் சிறந்த இசைக்கான விருதாக ‘விஸ்வாசம்’ படத்தின் இசையமைப்பாளர் டி.இமானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. தேசிய விருது அறிவிக்கப்பட்ட இசையமைப்பாளர் இமானுக்கு இந்தியாவின் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து தேசிய விருது பெற்ற பிரபலங்களை வாழ்த்தி நடிகர் கார்த்தி, நடிகை அதுல்யா ரவி, நிகழ்ச்சி தொகுப்பாளினி ரம்யா ஆகியோர் வலைதளங்களில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர், நடிகைகளின் இந்த ட்வீட்கள் எல்லாம் தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here