24 நேரத்தில் 40 ஆயிரத்தை தாண்டிய கொரோனா – சுகாதாரத்துறை தகவல்!!

0

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டி இந்திய மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மேலும் மொத்த பாதிப்பு குறித்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.

இந்தியா கொரோனா பாதிப்பு:

யாரும் எதிர்பாராத வகையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இதனை தடுப்பதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் தொடர்ந்து மக்களை மாஸ்க் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு வறுபுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு தகவலை மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 40,715 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 1,16,86,796 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் இந்தியாவில் கொரோனவால் தாக்கப்பட்டு 199 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை சுமார் 1,60,166 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவில் இருந்து 29,785 பேர் குணமாகியுள்ளனர்.

ஒரு வருஷம் அதுக்குள்ள ஓடி போச்சு – லாக்டவுன் நினைவுகள்!!

இதனால் நாட்டில் இதுவரை கொரோனாவில் இருந்து 1,11,81,253 பேர் குணமாகியுள்ளனர். தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்டு நாட்டில் 3,45,377 பேர் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து கொரோனா பரவல் நாட்டில் அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் மேலும் இனி அனைவரும் கட்டாய முறையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here