ஜெயலலிதாவை உரித்து வைத்திருக்கும் கங்கனா ரனாவத் – ‘தலைவி’ ட்ரைலர் வெளியீடு!!

0

பலரும் ஆர்வமுடன் எதிர்பார்த்திருந்த திரைப்படமான “தலைவி” திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியது. இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த படம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதை என்பது குறிப்பிடத்தக்கது.

‘தலைவி’ திரைப்படம்

முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் வாழ்கை கதையினை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டு வரும் படம் தான், “தலைவி”. இந்த திரைப்படத்தினை தமிழ் திரையுலக இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார்.

ஸ்பைசியான “சிக்கன் டிக்கா” ரெசிபி – ட்ரை பண்ணி தான் பாருங்களேன்!!

இவருடன் நடிகர்கள் அரவிந்த்சாமி, சமுத்திரக்கனி போன்ற முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு வசனகர்த்தார்களாக ‘பாகுபலி’ திரைப்படத்தின் வசனகர்த்தாக்களான மதன் கார்க்கி உட்பட நால்வர் எழுதியுள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையினை ஆதி முதல் அந்தம் வரை அழகாக படம் பிடித்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த திரைப்படம் பல சர்ச்சைகளை சந்தித்து தான் தற்போது வெளியிடப்பட உள்ளது. மொத்தமாக, நான்கு மொழிகளில் இந்த திரைப்படம் வெளியிடபட உள்ளது. இன்று நடிகை கங்கனா ராணவத்தின் பிறந்தநாளை ஒட்டி ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு பெண்ணாக ஜெயலலிதா அரசியல் களத்தில் எப்படிப்பட்ட பிரச்சனைகள் மற்றும் தடைகளை தாண்டி வந்துள்ளார் என்று எடுத்துக்காட்டி உள்ளனர்.

இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக நடிகை கங்கனா ரணாவத் மிகவும் கடுமையாக உழைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here