ஆப்பிள் ஸ்டார் ஆன்லைன் இந்தியாவில் தொடக்கம் – புதிய சலுகைகள்!!

0

இந்தியாவில் முதல் ஆப்பிள் ஸ்டார் ஆன்லைன் இன்று தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஐபோன், ஐபேட், ஆப்பிள் வாட்ச், மேக் போன்ற ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளை அமேசான், பிளிப்கார்ட் போன்ற பிற தளங்களில் இல்லாமல் நேரடியாக ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து வாங்க முடியும். மேலும் காண்டாக்ட்லெஸ் டெலிவரி மற்றும் பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு உள்ளது.

ஆப்பிள் ஸ்டார் ஆன்லைன்:

ஆப்பிளின் ஆன்லைன் ஸ்டோர் (www.apple.com/in/shop) நேரடி வாடிக்கையாளர் சேவைகளை வழங்கும். சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6, வாட்ச் எஸ்இ, ஐபாட் ஏர் (4th gen) மற்றும் ஐபாட் (8th gen) ஆகியவற்றை ஆப்பிள் ஸ்டோரிலிருந்து ஆன்லைனில் வாங்கலாம். அக்டோபர் மாதம் முதல் ஹோம் டெலிவரி தொடங்குகிறது. ஆர்டர் செய்யப்பட்ட 24 முதல் 72 மணிநேரத்திற்குள் டெலிவரி செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

பழைய சாதனங்களை ஆப்பிள் ஸ்டோரில் விற்பனை செய்து அதன் மூலம் புதிதாக வாங்கும் ஆப்பிள் ஐபோன்களில் தள்ளுபடி பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் நீங்கள் உங்கள் பழைய ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை எக்ஸ்சேங் செய்து புதிய ஐபோன் 11 அல்லது ஐபோன் எஸ்இவை குறைந்த விலையில் வாங்கலாம். கிரெடிட்-டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு இஎம்ஐ, ரூபே, யுபிஐ, நெட் பேங்கிங் மற்றும் டெலிவரி ஆன் கிரெடிட் கார்டு போன்ற பணம் செலுத்தும் வசதிகளும் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இனி ஐபிஎல் போட்டிகளை மொபைலிலேயே கண்டுகளிக்கலாம் – ஜியோவின் அதிரடி சலுகை!!

இப்புதிய ஆப்பிள் ஸ்டோரில் மாணவர்களுக்கு EMI வசதிகளும் வழங்கப்பட்டு உள்ளன. மேலும் வாடிக்கையாளர் சேவை வசதியும் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதன் மூலம் நேரடியாக chat அல்லது போன்கால் மூலம் உங்களது சந்தேகங்களை ஆப்பிள் எக்ஸ்பர்ட்ஸ் தீர்த்து வைப்பர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here