உங்கள் ராசிப்படி எந்த விதமான தொழில் அமையும் ?? தெரிஞ்சிக்கலாம் வாங்க!!

2
work
work

ஒருவரின் காதல், திருமணம் போன்றவற்றை மட்டும் ஜாதகம் காட்டுவதில்லை. அவர்களின் தொழில், வேலை போன்றவற்றையும் இந்த ஜாதக அமைப்பின் மூலம் கணக்கிடலாம். ஒருவரின் லக்கின அடிப்படையில் அவர்களின் தொழில் அமைப்பு மாறுபடும்.

லக்கினம்:

நமது ஜாதகத்தில் லக்கினம் தான் நமது தலையெழுத்தை தீர்மானிக்கிறது. லக்கினம் வலிமை பெற்றதாக அமைவது மிக முக்கியம். நமது ராசி கட்டத்தில் லக்கினம் முதல் இடமாக கருதப்படும். அதனை தொடந்து வருபவை 2, 3 என கணக்கிடலாம். இவ்வொரு கட்டமும் நமது வாழ்வின் சுகபோகங்களை குறிப்பிடுவதாகும்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

work
workplace

அதன் அடிப்படையில் ராசிக்கட்டத்தில் 10 ஆம் இடம் நமது வேலை, தொழில் அமைப்பு போன்றவற்றை குறிப்பிடுவது ஆகும். அந்த 10 ஆம் இடத்தில் உள்ள ராசி அதிபதிகளை பொறுத்தே நமது தொழிலமைப்பு அமைகிறது.

work
work
  • சூரியன் நமது ராசிக்கட்டத்தில் லக்னத்தில் இருந்து 10 ஆம் இடத்தில் இருந்தால் அவர்கள் அரசியலில் ஈடுபடலாம். அரசு வேலை கிடைக்க கூட வாய்ப்புள்ளது. மாணிக்க, சிவப்பு வண்ண கற்களை விற்கலாம். தங்க ஆபரணங்களை தயாரித்து விற்பனை செய்யலாம். வழக்கறிஞர் கூட ஆகலாம்.
  • சந்திரன் 10 ஆம் வீட்டில் அமர்ந்திருந்தால் வெள்ளை நிற பொருட்களை உற்பத்தி செய்து விற்கலாம். இவர்களுக்கும் அரசு வேலை கிடைக்கும். மேலும் மீன் தொழில் செய்யலாம். பால் சம்மந்தப்பட்ட தொழிலில் ஈடுபடலாம். பேன்சி ஸ்டோர், தங்க நகை மற்றும் கவரிங் போன்ற கடைகளும் வைக்கலாம்.

இந்த ஒரு கயிறு போதும் உங்கள் தலையெழுத்தை மாற்ற!! 48 நாட்கள் நவகிரக வழிபாடு!!

  • செவ்வாய் 10 ஆம் வீட்டில் இருந்தால் ரியல் எஸ்டேட் தொழில்களில் ஈடுபடலாம். இவர்கள் சமையல் துறையில் வல்லவர்கள் ஆகலாம். வீடு, நிலம் போன்றவற்றை விற்பனை செய்து லாபம் பெறலாம். சிற்பி மற்றும் ஓவியர்களாக ஆகலாம். ராணுவத்தில் இவர்களுக்கு பணி கிடைக்கும்.
  • புதன் 10 ஆம் வீட்டில் அமர்ந்திருந்தால் இவர்களுக்கு பத்திரிகை துறை சிறந்ததாக இருக்கும். புதன் படிப்புக்காரகன் என்பதால் இவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றலாம். இவர்கள் ஜோதிடத்தில் வல்லவராக இருப்பார்கள். இன்சூரன்ஸ் துறையில் இவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இவர்களுக்கு பேச்சாற்றல் நன்றாக இருக்கும். பின்னாளில் நல்ல எழுத்தாளராக கூட வரலாம்.
  • சுக்ரன் 10 ஆம் வீட்டில் அமர்ந்திருந்தால் அவர்கள் பெரிய நடிகர்களாக மாறும் வாய்ப்பு உள்ளது. இவர்களுக்கு கலைத்துறையில் நல்ல வரவேற்பு இருக்கும். பேஷன் டிசைனர் தொழிலில் இவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
  • ராகு 10 ஆம் இடத்தில அமர்ந்திருந்தால் இவர்களுக்கு ரகசிய உளவாளி வேலைகள் கிட்டும். மேலும் ஒயின் ஷாப், கள்ளுக்கடை, சாராயக் கடை போன்றவற்றை நடத்தலாம். இவர்கள் தையல்காரர்கள் ஆகலாம். மேலும் ஆன்மீக ரீதியாக ரீதியான தொழில்களில் மெல்ல லாபம் கிடைக்கும்.
  • கேது 10 ஆம் வீட்டில் இருந்தால் அவர்கள் அறிவியல் துறையில் சிறந்து விளங்குவர். மேலும் இவர்கள் ஜோதிடத்திலும் ஈடுபடலாம். கசாப்பு கடைகள் வைக்கலாம். ஒயின் ஷாப் கடைகள் வைத்து லாபம் பார்க்கலாம். கேது 10 இல் அமர்வதால் திருட்டு தொழிலில் ஈடுபடுபவராக இருப்பர்.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here