உலகளவில் செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியல் 2020 – இடம்பெற்ற 5 இந்தியர்கள்!!

0

சமீபத்திய உலகில் தாக்கத்தை ஏற்படுத்திய 100 பேரின் (தலைவர்கள், முன்னோடிகள், கலைஞர்கள், விஞ்ஞானிகள், ஆர்வலர்கள், தொழில் முனைவோர் மற்றும் சில) ஆண்டு பட்டியலை டைம் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 5 பேர் இடம்பெற்று உள்ளனர். அவர்களை தவிர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் ஆகியோரும் உள்ளனர்.

5 இந்தியர்கள் விபரம்:

  1. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி டைம் இதழின் ‘2020 ஆம் ஆண்டில் மிகவும் செல்வாக்கு மிக்க 100 பேர்’ பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
  2. பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானாவும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
  3. ஷாஹீன் பாக் போராட்டத்தின் முகமாக மாறிய 82 வயதான பில்கிஸ்
  4. பேராசிரியர் ரவீந்திர குப்தா, எச்.ஐ.வி / எய்ட்ஸ் சிகிச்சையில் பணியாற்றியவர்.
  5. கூகிள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை

இந்த பட்டியலில் இடம் பெற்ற ஒரேயொரு இந்திய அரசியல்வாதி நரேந்திர மோடி அவர்கள் மட்டுமே. பிரதமர் மோடி 2014 ல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்த பட்டியலில் நான்கு முறை இடம்பெற்றுள்ளார். 2014, 2015, 2017 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் அவரது பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here