
தமிழகத்தில் 11, 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு (மார்ச் 13 & 14 ஆகிய தேதிகளில்) துவங்க உள்ளதால் நாள்தோறும் பல்வேறு அறிவிப்புகளை தேர்வுத்துறை இயக்குனரகம் தெரிவித்து வருகிறது. அதன்படி இந்த பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் அச்சடிக்கும் பணி அண்மையில் நிறைவுற்றது. இதனால் தேர்வு மையங்களுக்கான வினாத்தாள் கட்டுகளை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க பட்டது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் இந்த பொதுத்தேர்வு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி குறித்து தேர்வுத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 12ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீடு பணி ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 21ம் தேதிக்குள் முடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 11ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 24ம் தேதி முதல் மே 4ம் தேதி வரை நடைபெறும் என்றும் கூறியுள்ளனர்.
ரயில் பயணிகளே கவனம்., எல்லாம் மாறிடுச்சு, இது தெரியாம Train ல ஏறாதீங்க! நிர்வாகம் வார்னிங்!!
மேலும் 11ம் வகுப்பில் அரியர் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விடைத்தாள்கள் ஏப்ரல் 15 ம் தேதியிலிருந்து ஏப்ரல் 21ம் தேதிக்குள் மதிப்பீடு செய்யப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்ட இந்த தேதிகளில் மதிப்பீட்டு பணிகள் நிறைவு பெற்று, திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.