தமிழக பெண்களுக்கு ஹேப்பி நியூஸ்., இனி, உங்களுக்கு 100 நாள் வேலை 150 நாளாக மாற்றம்! முதல்வர் அறிவிப்பு!!

0

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் 100 நாள் வேலை கூடுதலாக 50 நாட்கள் சேர்த்து 150 நாள் திட்டமாக மாற்றம் செய்யப்பட உள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்:

தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அன்றுமுதல் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப கல்வி, விவசாயம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த நலத்திட்டங்கள் உரிய முறையில் செயல்படுவதை உறுதி செய்ய முதலமைச்சரின் கள ஆய்வு திட்டமும் செயல்பட்டு வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் இன்று சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பிக்கும் பொருட்டு பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இந்த திராவிட ஆட்சியில் பெண்கள் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் மகளிருக்கான இலவச பேருந்து பயணம், மகப்பேறு கால விடுமுறை 12 மாதமாக நீட்டிப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்பட்டு வருவதாக பெருமிதம் அடைந்தார்.

தமிழக 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களே கவனம்., விடைத்தாள் திருத்தும் தேதி வெளியீடு! தேர்வுகள் இயக்ககம் அதிரடி!!

இதையடுத்து வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் குடும்ப தலைவிக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட உள்ளது. மேலும் தமிழகத்தின் கிராம பகுதிகளில் செயல்பட்டு வரும் 100 நாள் வேலையை குடும்ப தலைவர்களாக கருதப்படும் பெண்களுக்கு கூடுதலாக 50 நாள் பணி வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன்மூலம் குடும்ப தலைவிகளுக்கு 100 நாள் வேலை இனிமேல் 150 நாள் வேலை திட்டமாக மாற்றப்படும் என்பதை பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here