இந்த வார இறுதியில் ரிசல்ட், முறையாக எழுதாதவர்கள் ஆப்சென்ட் – அண்ணா பல்கலை அதிரடி!!

0
Anna University
Anna University

கொரோனா பரவலுக்கு மத்தியில் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்ட இறுதிப்பருவ செமஸ்டர் தேர்வுகளுக்கான முடிவுகள் இந்த வார இறுதியில் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தேர்வினை முறையாக எழுதாதவர்களுக்கு ஆப்சென்ட் போடப்படும் எனவும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அண்ணா பல்கலை அறிவிப்பு:

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் இறுதிப்பருவம் தவிர்த்து பிற அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. யுஜிசி வழிகாட்டுதல்களின் படி ஆன்லைன் முறையில் அண்ணா பல்கலை சார்பில் கடைசி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன. கலை, அறிவியல் கல்லூரிகள் வீட்டில் இருந்தே மாணவர்களை தேர்வெழுத வைத்து, விடைத்தாள்களை pdf வடிவில் மற்றும் போஸ்டில் பெற்றுக்கொண்டன.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

ஆனால், அண்ணா பல்கலை முழுக்க முழுக்க ஆன்லைன் வாயிலாக செமஸ்டர் தேர்வினை நடத்தியதால், பல மாணவர்கள் அலட்சியத்துடன் தேர்வில் பங்கேற்றனர். சிலர் வீட்டில் படுத்துக்கொண்டும், வெளி இடங்களில் இருந்தும் தேர்வில் பங்கேற்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் அண்ணா பல்கலை சார்பில் அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

Anna univ
Anna univ

அதில், இன்ஜினியரிங் இறுதிப்பருவ தேர்வை படுத்துக்கொண்டு, டீக்கடைகளில் அமர்ந்து கொண்டு முறையாக எழுதாத மாணவர்களுக்கு ஆப்சென்ட் போடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அவர்கள் மீண்டும் தேர்வெழுத வேண்டி இருக்கும். ஏற்கனவே ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர்களுக்கு, மாணவர்கள் முறையான மரியாதை தருவதில்லை என கூறப்படும் நிலையில் அண்ணா பல்கலை இவ்வாறு அறிவித்துள்ளது.

அக்.14ம் தேதி மீண்டும் ‘நீட்’ தேர்வு நடத்த வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு!!

அதுமட்டுமின்றி இறுதிப்பருவ தேர்வு முடிவுகள் இந்த வார இறுதிக்குள் வெளியிடப்படும் எனவும் அண்ணா பல்கலை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலையின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் ரிசல்ட் வெளியிடப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here