ஸ்லீவ்லெஸ் சேலையில் மார்க்கமாக போஸ் கொடுத்த அனிகா – கிறங்கிப்போன ரசிகர்கள்!!

0

தமிழ், மலையாளம் தெலுங்கு என திரையுலகையே கலக்கி வருபவர் அனிகா சுரேந்தர். தற்போது ஸ்லீவ்லெஸ் சேலை அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனிகா சுரேந்தர்

தமிழில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அனிகா சுரேந்தர். தொடர்ந்து தனது நடிப்பு திறனால் மக்கள் மனதில் குழந்தையாக இடம் பிடித்தார். அஜித்தின் ரீல் மகள் என்றும் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.

மேலும் நயன்தாராவை போலவே அச்சு அசலாக இருக்கும் அனிகாவிற்கு தற்போது படவாய்ப்புகளும் குவிந்து வருகிறது. தெலுங்கு திரையுலகில் முதன்முதலாக நாயகியாக உருவெடுத்துள்ளார் அனிகா. கூடிய விரைவில் ஷூட்டிங் முடிவடைய இருக்கிறது.

இன்று மாலை 6 மணி வரை தான் டைம் – ஆ.ராசாவிற்கு தேர்தல் ஆணையம் நோட்டிஸ்!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவரது ரசிகர்களும் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டுள்ளனர். இப்படி தனது கேரியரில் அனிகா கவனம் செலுத்திக்கொண்டிருக்க ஒரு பக்கம் போட்டோஷூட்டில் ஆர்வம் காட்டி வருகிறார். சிறு குழந்தையாக நம் மனதில் பதிந்த அனிகா தற்போது 16 வயது மங்கையாக உருவெடுத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

சின்ன சின்ன புகைப்படங்களில் ஆரம்பித்து உச்சகட்ட கவர்ச்சியிலும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இதற்கு ஒரு பக்கம் ரசிகர்கள் அதிகம் இருந்தாலும், இந்த வயசில் இதெல்லாம் தேவையா? என்பது போல பலரும் அவரை திட்டியும் வருகின்றனர்.

இப்படி எல்லாம் இருக்க எதையுமே காதில் வாங்காமல் தனக்கு பிடித்ததை செய்கிறேன் என்று போட்டோஷூட் நடத்தி கொண்டு தான் இருக்கிறார். மேலும் தமிழிலும் இவருக்கு வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே மிருதன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜெயம் ரவிக்கு தங்கையாக நடித்திருந்தார்.

எப்படியும் இரண்டாவது பார்ட்டில் இவர் நடிக்க வேண்டி இருக்கும். அதற்கும் மேல் விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடித்துக்கொண்டுள்ளார். அந்த ஷூட்டிங்கில் இருக்கும் புகைப்படமும் இணையத்தில் வைரலானது. இப்படி சிறு வயதிலேயே மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்து வருகிறார். தற்போது அவர் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஸ்லீவ்லெஸ் சேலையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு லைக்ஸ் அள்ளியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here