கேரளத்து கப்பக்கிழங்காக ஓணத்தை கொண்டாடிய அஜித் பட நடிகை – கெட்டப்பை பார்த்து மெய்சிலிர்த்து போன ரசிகர்கள்!!

0

குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் பிரபலமான அனிகா சுரேந்தர் தற்போது ஓணம் பண்டிகையை கொண்டாடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் மெய்சிலிர்த்து போயிள்ளனர்.

அனிகா சுரேந்தர்

மலையாள நடிகையான அனிகா சுரேந்தர் என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர். முதல் படத்திலேயே அஜித், திரிஷா மற்றும் அனுஷ்காவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

மலையாளத்திலும் மம்முட்டி, ஸ்ரீராம் போன்ற முன்னணி நடிகர்களுக்கு மகளாகவும் நடித்திருந்தார். மேலும் சிறு வயதிலேயே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனால் தான் அடுத்தடுத்த வாய்ப்பு இவருக்கு கிடைக்க ஆரம்பித்தது. மேலும் மக்களுக்கு விருப்பமான நட்சத்திரமாக மாறினார்.

அடுத்தடுத்து ஜெயம் ரவி, அஜித் என முக்கிய நடிகர்களுடனேயே இணைந்தார். மிருதன் பார்ட் 2 படமும் இனி உருவாக இருக்கிறது. விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அதன் பிறகு மலையாளத்தில் நாயகியாக அறிமுகமாக உள்ளார்.

இப்படி படிப்படியாக தனது கேரியரை உயர்த்திக்கொண்டு வருகிறார் அனிகா. எந்த ஒரு நெகடிவ் கமெண்ட்டிற்கும் கவலைப்படாமல் தனது வேலையை மட்டுமே பார்த்து வருகிறார். சிலர் இவரை வெறுத்து வந்தாலும் பலர் ஆதரவாக தான் இருக்கின்றனர். அஜித்தின் ரீல் மகளாக தான் தல ரசிகர்கள் அவர்களை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தான் தற்போது அனிகா சுரேந்தர் ஓணம் பண்டிகையை கேரளா சேலையில் கொண்டாடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த வயதில் இத்தனை அழகா?? என்று ரசிகர்கள் மெய்சிலிர்த்து தான் போயுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here