பிரபல தமிழ் நடிகை மாரடைப்பால் திடீர் மரணம் – திரையுலகினர் பேரதிர்ச்சி!

0

மாரடைப்பால் நடிகை நல்லெண்ணெய் சித்ரா திடீரென்று சென்னையில் நேற்று இரவு உயிர் இழந்துள்ளார். இவர் 1975 இல் கே.பாலசந்தர் இயக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக முதன்முதலாக திரையுலகில் காலடி வைத்தார்.

நடிகை சித்ரா அபூர்வ ராகங்கள் படத்தில் முதலில் அறிமுகமாகி அதன் பின்னர் பொண்டாட்டி ராஜ்யம், சேரன் பாண்டியன் ,ஊர்காவலன் என்று பல திரைப்படங்களில் நடித்து . 80ஸ் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகையாக வலம் வந்தவர் இவர்.

தொடர்ந்து சீரியல்கள்,படங்கள் என்று நடித்து வந்த நடிகை சித்ரா நல்லெண்ணெய் விளம்பரம் மூலம் திரையுலகின் அடையாளமாக மாறினார்.மேலும் இவர் தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்திருக்கிறார்.

கொரோனா காலகட்டத்தில் பல பிரபலங்கள் இதுபோன்று மாரடைப்பால் காலமான நிலையில் சென்னையில் மகள் மற்றும் கணவருடன் வாழ்ந்து வந்த நடிகை நல்லெண்ணெய் சித்ரா திடீரென்று மாரடைப்பு காரணமாக இறந்துள்ளது திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here