தக்காளி இல்லமால் சுவையான ‘ஆந்திரா உள்ளி சட்னி’., இதை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க!!

0
தக்காளி இல்லமால் சுவையான 'ஆந்திரா உள்ளி சட்னி'., இதை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க!!
தக்காளி இல்லமால் சுவையான 'ஆந்திரா உள்ளி சட்னி'., இதை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க!!

தற்போது நாடு முழுவதும் தக்காளியின் விலை உயர்ந்து மக்களை பெரும் பீதியில் தள்ளியுள்ளது. இதனால் மக்கள் தக்காளியை வாங்கி பயன்படுத்த இயலாத சூழ்நிலைக்கு தள்ளபட்டுள்ளனர். தற்போது தக்காளி இல்லாமால் ஆனால் அதே சுவை தரக்கூடிய ஒரு சட்னி தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தேவையான பொருட்கள்’

  • பெரிய வெங்காயம் – 3
  • வெள்ளை பூண்டு – 12
  • புளி – 25 கிராம்
  • நல்லெண்ணெய் – 50 கிராம்
  • உப்பு – தேவையான அளவு
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்;

இந்த ஆந்திரா உள்ளி சட்னி தயாரிப்பதற்கு முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி கொள்ளவும். பிறகு எண்ணெய் சூடானவுடன் அதில் சீரகம் போட்டு அதோடு 12 வெள்ளை பூண்டை சேர்த்து வதக்கி கொள்ளவும். அதன் பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வேகவைத்து கொள்ளவும்.

தமிழக மக்களே உஷார்..,  வழக்கத்தை விட வெப்பநிலை அதிகரிக்கும்.., வானிலை மையம் பகீர்!!!

பின் அதில் 2 டீஸ்பூன் மிளகாய் தூள், 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். இதோடு ஒரு கைப்பிடி அளவு மல்லி இலைகள் சேர்த்து வதக்கி ஆற வைத்து கொள்ளவும். பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்து கொள்ளவும். இப்போது நாம் தயார் செய்து வைத்துள்ள இந்த சட்னியை இட்லி தோசைக்கு வைத்து சாப்பிட்டால் சுவை அள்ளும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here