அமெரிக்கா அதிபர் டிரம்ப்பின் ஏலியன் கூட்டமைப்பு – பரபரப்பை ஏற்படுத்திய இஸ்ரேல் விஞ்ஞானி!!

0

அமெரிக்கா அதிபர் டிரம்ப் வேற்றுகிரகவாசிகள் என்று அழைக்கப்படும் ஏலியன்களுடன் தொடர்பில் இருப்பதாக இஸ்ரேல் நாட்டின் முன்னாள் பாதுகாப்பு விண்வெளி விஞ்ஞானி ஹைம் ஏஷெட் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்கா – ஏலியன்கள்:

அமெரிக்கா நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். அவர் வேற்றுகிரகவாசிகளான எலியன்களுடன் தொடர்பில் உள்ளார். வேற்றுலக உயிரி என்பது புவியைச் சார்ந்திரா வேற்றுலக உயிரினைத்தைக் குறிப்பதாகும். இதனை வேற்றுலக ஜந்து (“Alien”) என்றும் குறிப்பிடுவர். இவை அளவில் சிறிய பாக்டீரியா முதற்கொண்டு மனிதனை விட எளிதற்ற உடலமைப்பினைக் கொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அறிவியலாளர்கள் பலர் வேற்றுலக உயிரி இருக்கக்கூடும் என நம்புகின்றனர். அதனால், இவற்றைத் தேடி வானொலி அலைகளும், தொலைநோக்கிகளும் இருபதாம் நூற்றாண்டிலிருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்டு செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. திரைப்படங்களிலும், இவை பெருமளவில் கார்ட்டூனாக பயன்படுத்தப்படுகின்றன.

மசாஜ் சென்டர் பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் – டிக்டாக் ரவுடி பேபி சூர்யா அதிரடி கைது!!

1940 முதல் அமெரிக்காவில் பல பறக்கும் தட்டுக்கள் பார்த்ததாக மக்கள் கூறியுள்ளனர். மறைந்த இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் 2010 இல் மனிதர்கள் அன்னிய உயிரிகளைத் தொடர்பு கொள்ள முயற்சி எடுக்க கூடாது, மனிதர்கள் இருப்பது தெரிந்தால் அது மனிதர்களுக்கு ஆபத்தாகும், அவை பூமியின் ஆதாரங்களை கொள்ளையடிக்க வரலாம், எனவும் எச்சரித்தார்.

இந்நிலையில் இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானி ஒருவர் அமெரிக்கா நாட்டின் வாரஇதழுக்கு அள்ளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது. இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர் ஹைம் ஏஷெட், இவர் முன்னாள் விண்வெளி பாதுகாப்பு தலைவர் ஆவார். அவர் அமெரிக்கா நாட்டின் வார நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார், “வேற்றுக்கிரவாசிகள் அமெரிக்கா இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுடன் தொடர்பில் இருக்கின்றன.

இவற்றை பற்றி மக்களுக்கு தெரிந்தால் அவர்கள் அச்சம் கொள்வார்கள். அதனால் அவற்றை பற்றியும் விண்வெளி ஆராய்ச்சியில் ஏலியன்கள் பற்றியும், பறக்கும் தட்டுகள் பற்றியும் மக்கள் புரிந்து கொள்ளும் வரை ஏலியன்கள் பற்றியும், அவற்றுடனான தொடர்ப்பு பற்றியும் வெளியில் கூறவேண்டாம் என அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளதாகவும், இதுபற்றி ஏலியன்களுடன் ஒப்பந்தம் போட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here