விஜய்க்கு மட்டும் இல்ல, அஜித்துக்கும் நான்தான் வில்லன்? AK 62 வில் களமிறங்கும் முக்கிய பிரபலம்!!

0
விஜய்க்கு மட்டும் இல்ல, அஜித்துக்கும் நான்தான் வில்லன்? AK 62 வில் களமிறங்கும் முக்கிய பிரபலம்!!
விஜய்க்கு மட்டும் இல்ல, அஜித்துக்கும் நான்தான் வில்லன்? AK 62 வில் களமிறங்கும் முக்கிய பிரபலம்!!

அஜித் நடித்து வரும் துணிவு படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், அடுத்ததாக உருவாகும் ஏகே 62 வில் முக்கிய வில்லனாக முக்கிய பிரபலம் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

முக்கிய பிரபலம்:

அஜித் நடிப்பில், இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம், வருகிற ஜனவரி 11ஆம் தேதி வெளியாக உள்ளது. ஏற்கனவே வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை படம், கடந்தாண்டு வெளியாகி எதிர்பார்த்த அளவு வெற்றி அடையவில்லை.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதனால், தற்போது வெளியாக உள்ள துணிவு படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், அஜித் அடுத்தபடியாக ஏகே 62 படத்தில் நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாகவும் அறிவிப்பு வெளியாகி இருந்தது. தற்போது இந்த படத்தில், பிரபல வில்லன் நடிகர் அர்ஜுன் தாஸ் இணைந்துள்ளதாக அப்டேட் வெளியாகி உள்ளது.

துணிவு VS வாரிசு.., சூடுபிடிக்கும் டிக்கெட் விற்பனை.., தியேட்டரில் அலைமோதும் கூட்டம்!!!

இவர் ஏற்கனவே மாஸ்டர் படத்தில், விஜய்க்கு வில்லனாக நடித்திருந்ததால் , இந்தப் படத்தின் மீது இவருக்கான எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. ஏகே 62 வில் ஏற்கனவே அரவிந்த் சாமி இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அர்ஜுன் தாஷூம் இணைந்திருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here