அஜித் ரசிகர்களை ஏமாற்றிய போனிகபூர் – வலிமை பட அப்டேட்..!

0

நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை’. அதற்கடுத்து போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. இதன் படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கால் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.

வலிமை முதல் பார்வை:

வலிமை படம் குறித்து எவ்வித அப்டேட்களும் இதுவரை வெளியிடப்படவில்லை. படத்தின் நாயகி யார் என்று கூட இதுவரை யாருக்கும் தெரியாது. இந்நிலையில் நடிகர் அஜித் பிறந்தநாள் மே 1 (நாளை) அன்று கொண்டாடப்படுகிறது. அதனால் நாளை வலிமை படத்தின் முதல் பார்வை வெளியாகும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ட்விட்டரை தெறிக்க விட்ட ரசிகர்கள் – வைரலான நடிகர் அஜித் பிறந்தநாள் Common DP

இந்நிலையில் கொரோனாவால் மக்கள் அவதிப்பட்டு வரும் வேளையில் ‘வலிமை’ திரைப்படம் குறித்த எவ்வித விளம்பரமும் வெளியிடப்படாது என தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்து உள்ளார். இது அஜித் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் நாளை அஜித் பிறந்தநாளுக்கு ஹேஷ்டேக் உலகளவில் அதிக ட்ரெண்ட் செய்து சாதனை படைக்க ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here