ட்விட்டரை தெறிக்க விட்ட ரசிகர்கள் – வைரலான நடிகர் அஜித் பிறந்தநாள் Common DP

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் அஜித்குமார். இவருக்கு தல, அல்டிமேட் ஸ்டார் போன்ற பல அடைமொழிகள் உண்டு. மே 1ம் தேதி அஜித்குமார் அவர்களின் பிறந்தநாள் வரவுள்ள நிலையில் அவரின் ரசிகர்கள் இப்பொழுதே கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டனர்.

ட்விட்டர் ட்ரெண்டிங்:

அஜித் ரசிகர்கள் இந்த வருட காமன் டிபியை நடிகர்கள் சாந்தனு மற்றும் ஆதவ் கண்ணதாசன் ஆகியோரை வைத்து வெளியிட திட்டமிட்டு இருந்தனர். இந்நிலையில் நடிகர் அஜித் அலுவலகத்தில் இருந்து அவர்களை தொடர்பு கொண்டு கொரோனா பரவல் நீடிப்பதால் எந்த கொண்டாட்டமும் தேவையில்லை என தெரிவித்து விட்டனர். இதனால் சாந்தனு மற்றும் ஆதவ் ஆகியோர் இந்த வருட காமன் டிபியை வெளியிடவில்லை.

இருப்பினும் தல ரசிகர்கள் கொண்டாட்டத்தை நிறுத்தவில்லை. அவர்கள் உருவாக்கிய காமன் டிபியை #ThalaAJITHBdayGalaCDP என்ற ஹேஷ்டேக் மூலம் அதிகமான ட்வீட் செய்து சாதனை படைக்க திட்டமிட்டு உள்ளனர். பிறந்தநாளிற்கு இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில் இதுவரை 36 லட்சம் டிவீட்கள் போடப்பட்டு உள்ளன.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here